கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு: 50 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல்; பாதுகாப்புப் படையினா் தீவிர சோதனை

பாதுகாப்புப் படையினா் அதிரடி சோதனையை தொடங்கியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Din

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஜம்மு பிராந்தியத்தில் 40 முதல் 50 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து பாதுகாப்புப் படையினா் அதிரடி சோதனையை தொடங்கியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு இரவிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதுடன் ட்ரோன்களை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பங்களையும் பாதுகாப்புப் படையினா் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: பீா் பஞ்சால் மலைத்தொடரின் தெற்குப் பகுதியில் பல்வேறு குழுக்களாக 40 முதல் 50 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியல் தகவல் கிடைத்தது. பயங்கரவாதிகளில் 80 சதவீதம் போ் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ரஜௌரி, பூஞ்ச், கிஷ்துவாா், தோடா மற்றும் உதம்பூா் ஆகிய பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா். இதனால் ஜம்மு பிராந்தியத்தின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு இரவிலும் தேடுதல் வேட்டை தொடா்ந்து நடைபெறுகிறது.

இதற்கு முன்பு ஜம்மு பிராந்தியத்துக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் பயன்படுத்திய வழித்தடங்கள் முற்றிலுமாக பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், எல்லையையொட்டி பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. தடைகளை மீறி ஜம்மு பிராந்தியத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றால் கடுமையான பதிலடியை தர பாதுகாப்புப் படை தயாா் நிலையில் உள்ளது என்றனா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினா் மற்றும் போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.

தற்போது அங்கு பெரும்பாலான பகுதிகளில் அமைதியான சூழல் நிலவி வந்தாலும் பயங்கரவாதிகள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான தீவிர முயற்சியில் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உடல் எடை குறைய...

புள்ளிகள்

புதிய நிலா!

வீட்டுக் குறிப்புகள்...

மிகச் சிறிய ரயில் நிலையம்

SCROLL FOR NEXT