முகப்பு
பலியான ராதிகா யாதவ்.
இந்தியா

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், தந்தையால் சுட்டுக் கொலை! காரணம் என்ன?

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், அவரது தந்தையால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கான காரணம் பற்றி

இந்தியா

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், தந்தையால் சுட்டுக் கொலை! காரணம் என்ன?

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், அவரது தந்தையால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கான காரணம் பற்றி

Updated On : 11 ஜூலை, 2025 at 10:09 AM
பலியான ராதிகா யாதவ்.
பகிர்:

ஹரியாணா மாநிலம், குருகிராமைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், அவரது தந்தையால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காரணம் குறித்து காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ். இவர் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடியிருந்தார். இவர் குடும்பத்தினருடன் குருகிராமில் உள்ள செக்டார் 57- பகுதியில் வசித்துவந்த நிலையில், வியாழக்கிழமை, அவரது தந்தையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

49 வயதாகும் தீபக் யாதவ், தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் ராதிகாவை சுட்டதில், மூன்று குண்டுகள் அவரது உடலில் பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறார்.

இது குறித்து விசாரணை நடத்தி, தீபக் யாதவை கைது செய்த காவல்துறையினர், ராதிகா யாதவ், சொந்தமாக டென்னிஸ் பயிற்சி மையம் நடத்தி வந்துள்ளார். இது தந்தைக்குப் பிடிக்கவில்லை. இது தொடர்பாகவும், ராதிகா, இன்ஸ்டாவில் ரீல்ஸ் எடுத்துப் போடுவது தொடர்பாகவும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

காரணம் என்ன?

ராதிகா, டென்னிஸ் பயிற்சி மேற்கொள்ள, தீபக் சுமார் 2 கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளார். ஆனால், அண்மையில் ராதிகாவுக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் டென்னிஸ் விளையாடாமல் இருந்துள்ளார். இதில்லாமல் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ் விடியோக்கள் எடுத்து பதிவேற்றம் செய்திருக்கிறார். இதனால் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் எனக் கருதிய தீபக், மகளைக் கண்டித்திருக்கிறார். ஆனால், தந்தை சொல்வதைக் கேளாமல் தொடர்ந்து இன்ஸ்டாவில் ரீல்ஸ்களை பதிவேற்றம் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக நேரிட்ட வாக்குவாதத்தின்போதுதான், தீபக், தனது கைத்துப்பாக்கியை எடுத்துவந்து மகளை சுட்டுக் கொலை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்தபோது, ராதிகாவின் தாய் மற்றும் அண்ணன் இருவரும் வீட்டில்தான் இருந்துள்ளனர். அவர்கள்தான் ராதிகாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

டென்னிஸ் விளையாட்டில் வளரும் நட்சத்திரமாக, ராதிகா இருந்துள்ளார். டென்னிஸ் தரவரிசையில் 113-வது இடத்தைப் பிடித்திருந்தார். ஹரியாணா மாநில அளவில், இரட்டையர் அணியில் நான்காவது இடத்தில் இருந்துள்ளார்.

summary

Tennis player Radhika Yadav was shot dead by her father, and the reason behind it

முழு கட்டுரையைப் படிக்க →