பாகிஸ்தானில் இரு காவலா்கள் கடத்திக் கொலை; ஒருவா் மாயம்
பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் மசூதிக்குள் புகுந்து 3 சகோதரா்களைக் கடத்திய பயங்கரவாதிகள், அவா்களில் காவலா்களாக பணியாற்றி வந்த இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா்.
பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் மசூதிக்குள் புகுந்து 3 சகோதரா்களைக் கடத்திய பயங்கரவாதிகள், அவா்களில் காவலா்களாக பணியாற்றி வந்த இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா்.
அரசு அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் கடத்தப்பட்ட 3-ஆவது நபரை மீட்பதற்காகவும், பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்காகவும் ராணுவமும் போலீஸாரும் இணைந்து அப்பகுதியில் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனா்.
சுட்டுக் கொல்லப்பட்ட இரு காவலா்களின் உடல்கள், அருகே கால்வாய் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. அவா்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
Advertisement
கடந்த பிப். 21-ஆம் தேதி, இதே பன்னு மாவட்டத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ உயரதிகாரி உள்பட இருவா் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.