முகப்பு
இந்தியா

மாநிலங்களவைக்கு 4 நியமன எம்.பி.க்கள் அறிவிப்பு

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 13 ஜூலை 2025, 12:21 pm IST
மாநிலங்களவை - கோப்புப்படம்
பகிர்:

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

அதில், மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகம் (பாஜக) மூத்த வழக்கறிஞர், வெளியுறவுத்துறை முன்னாள் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, முன்னாள் ஆசிரியர் சதானந்தன் மாஸ்டர் (பாஜக) மற்றும் வரலாற்று ஆய்வாளர் மீனாக்‌ஷி ஜெயின் ஆகியோர் நியமன எம்.பிக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் பலி

இதனை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது. இதனிடையே நியமன எம்.பி.க்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

Advertisement

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார்.

மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.

மீதமுள்ள உறுப்பினர்கள் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

President Droupadi Murmu has nominated four eminent personalities to the Rajya Sabha (RS), India's Upper House of Parliament, on the recommendation of the Council of Ministers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.