தலைநகர் தில்லியில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரசாந்த் விஹார் மற்றும் துவாரகா செக்டார் 16 இல் உள்ள பள்ளிகளிலிருந்தும், சாணக்யபுரியில் உள்ள மற்றொரு பள்ளியிலிருந்தும் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக போலீஸாருக்கு திங்கள்கிழமை காலை அழைப்புகள் வந்தன. உடனே அப்பள்ளிகளில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
துவாரகா துணை காவல் ஆணையர் அங்கித் சிங் கூறுகையில், "பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாக துவாரகா வடக்கு காவல் நிலையத்திற்கு திங்கள்கிழமை அதிகாலை அழைப்பு வந்தது. உள்ளூர் காவல்துறை, மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு அகற்றும் படையினர் பள்ளியை அடைந்து உரிய சோதனைகளை நடத்தினர்.
பள்ளியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. சைபர் போலீஸ் நிபுணர்கள் மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை கண்டறிந்து வருகின்றனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இதனால் தலைநகர் தில்லியில் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.