ஹைதராபாத்தில் கம்யூனிஸ்ட் நிர்வாகி சுட்டுக்கொலை!
தெலங்கானாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
தெலங்கானாவைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. சந்தூ ராதோட் (வயது 47). இவர், மலக்பேட் பகுதியிலுள்ள பூங்காவின் அருகில் இன்று (ஜூலை 15) காலை, தனது வழக்கமான நடைப்பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
அப்போது, அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், சந்தூ ராதோடின் மீது மிளகாய்ப் பொடியை வீசி, துப்பாக்கியால் சுட்டு, தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்தத் தாக்குதலில், பலத்த காயமடைந்த சந்தூ ராதோட், சம்பவயிடத்திலேயே பரிதாபமாகப் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சம்பவயிடத்துக்கு விரைந்த காவல் துறையினர், சந்தூ ராதோடின் உடலைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: டெஸ்லாவின் முதல் ஷோரூம் மும்பையில் திறக்கப்பட்டது!
A Communist Party of India official has been shot dead by unidentified assailants in Hyderabad, Telangana.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.