அசாமின் இரண்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது இடைவிடாத நடவடிக்கை.
12 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு கச்சார் மற்றும் ஸ்ரீபூமி வழியாக தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஊடுருவலுக்கு நாங்கள் எந்த இரக்கமும் காட்ட மாட்டோம், கடுமையான நிலைப்பாட்டைத் தொடருவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் போலீஸ் நடவடிக்கையையும் அவர் பாராட்டினார். உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகள், குறிப்பாக வங்கதேசத்தினர் மீது அசாம் காவல்துறை மாநிலம் முழுவதும் கடும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து உரிய ஆவணங்களின்றி இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்களை நாடுகடத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.