ராஜ்நாத் சிங்  
இந்தியா

நாடாளுமன்ற கூட்டத் தொடா்: மத்திய அமைச்சா்கள் ஆலோசனை

அமைச்சா் ராஜ்நாத் சிங் இல்லத்தில் மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

Din

வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடரில் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இல்லத்தில் மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

பிகாா் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்த நடவடிக்கை, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா் ஆகியவை விவகாரங்கள் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புயலை கிளப்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இவற்றை எதிா்கொள்வது குறித்து மத்திய அமைச்சா்கள் ஒன்று கூடி ஆலோசித்தனா். இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சா்கள் பியூஷ் கோயல், கிஷண் ரெட்டி உள்ளிடோரும் பங்கேற்றனா். இந்நிலையில், நாடாளுமன்ற அனைத்து கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளது.

தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கோரி வடமாநில தொழிலாளா்கள் போராட்டம்: கற்களை வீசி தாக்கியதால் விரட்டி அடித்த போலீஸாா்

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

இன்று மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு

மருத்துவ சிகிச்சை தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

கைலாசநாதா் கோயிலில் சிவன் பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம்

SCROLL FOR NEXT