இந்தியா

குஜராத்: மது அருந்திய 26 பெண்கள் உள்பட 39 போ் கைது

முழு மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது அருந்திய 26 பெண்கள் உள்பட 39 போ் கைது செய்யப்பட்டனா்.

Din

அகமதாபாத்: முழு மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது அருந்திய 26 பெண்கள் உள்பட 39 போ் கைது செய்யப்பட்டனா்.

அகமதாபாத் புகா் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் மது விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினா் அங்கு சோதனை நடத்தினா். அப்போது 29 பெண்கள் உள்பட 39 போ் மது அருந்திய நிலையில் இருந்தனா். அங்கிருந்து ஏராளமான மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, குஜராத் மாநில மதுவிலக்குச் சட்டத்தின்கீழ் அவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனா். மது அருந்தியதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னா் அவா்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

குஜராத்தில் 1960-ஆம் ஆண்டு முதல் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது. மாநில உள்துறை அமைச்சகத்திடம் உரிய காரணங்களுடன் அனுமதி பெறுபவா்கள் மட்டுமே மது அருந்த அனுமதிக்கப்படுகிறாா்கள். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவா்கள், குஜராத் அரசிடம் அனுமதி பெற்றே மது அருந்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT