தில்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதிதாக மாற்றப்பட்ட நீதிபதிகளுக்குத் தில்லி தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
நீதிபதி வி. காமேஸ்வர் ராவ், நீதிபதி நிதின் வாசுதேவ் சாம்ப்ரே, நீதிபதி விவேக் சௌத்ரி, நீதிபதி அனில் ஷேதர்பால், நீதிபதி அருண் குமார் மோங்கா, நீதிபதி ஓம் பிரகாஷ் சுக்லா ஆகிய ஆறு நீதிபதிகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர்நீதிமன்றங்களில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர்.
தில்லி உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 60 நீதிபதிகளில் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
பதவியேற்று விழாவில் தில்லி உயர்நீதிமன்றத்தின் பல நீதிபதிகள், புதியதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தில்லி உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பிற வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர்.
மே 26 அன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில் செய்யப்பட்ட பரிந்துரைகளைத் தொடர்ந்து, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் கடந்த வாரம் நீதிபதிகளின் இடமாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.
நீதிபதி வி. காமேஸ்வர ராவ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தில்லி உயர்நீதிமன்றத்துக்கு வருகை தருகிறார். தில்லி அமர்வில் 11 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.
நீதிபதி அருண் மோங்கா, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாற்ர. இவர் பல ஆண்டுகள் சட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார். இவர் தில்லியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயிற்சி பெற்றவர். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார்.
நீதிபதி விவேக் சௌத்ரி அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து மாற்றப்பட்டுள்ளார். மீரட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், சிவில் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் விரிவான அனுபவம் பெற்றவர். 2017 முதல் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.
நீதிபதி அனில் க்ஷேதர்பால், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த இவர் குருக்ஷேத்திராவில் தனது சட்டப் பயிற்சியைத் தொடங்கினார்.
நீதிபதி ஓம் பிரகாஷ் சுக்லா, அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசியலமைப்பு மற்றும் சேவையில் 20 ஆண்டுகளாகப் பயிற்சி பெற்ற நிலையில், 2024 இல் நீதிபதி அமர்வில் சேர்ந்தார்.
நீதிபதி நிதின் வாசுடியோ சாம்ப்ரே, மும்பை உயர் நீதிமன்றத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாக்பூரைச் சேர்ந்த சட்டப் பட்டதாரியான இவர், முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி ஷரத் ஏ. போப்டேவின் கீழ் தனது பயிற்சியைத் தொடங்கினார்.
இந்த ஆறு நீதிபதிகளின் பதவியேற்பு, நீதித்துறை பணிச்சுமையைக் குறைத்து, தேசிய தலைநகரில் வழக்குத் தீர்ப்பின் விகிதங்களை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தில்லி உயர்நீதிமன்றம்
சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாகக் குறைக்கப்பட்ட அமர்வுகளுடன் செயல்பட்டு வருகிறது, மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.