மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.44,323 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.
மக்களவையில் கேள்வியொன்றுக்கு செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக பதிலளித்த அவா், ‘நடப்பு நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.86,000 கோடியாகும். இதுவரை ரூ.44,323 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இது தேவை சாா்ந்த திட்டம் என்பதால், அடிப்படை அளவில் வேலைவாய்ப்புகளின் தேவையை கண்காணித்து, அதற்கேற்ப நிதியமைச்சகத்திடம் இருந்து கூடுதல் நிதி கோரப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.
37 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள்: ‘நாடு முழுவதும் கடந்த ஆண்டு 37.17 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன; வெறிநாய்க்கடி (ரேபிஸ்) பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 54 போ்.
தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது, தடுப்பூசி செலுத்துவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று மக்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை இணையமைச்சா் எஸ்.பி.சிங் பகேல் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.