வெள்ளத்தில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகா: இமாச்சலின் குழந்தையாக அறிவிப்பு
இமாச்சல் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகா மாநிலத்தின் குழந்தையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகாவை, மாநிலத்தின் குழந்தையாக அரசு அறிவித்து, அவரது வாழ்க்கை, கல்வி என அனைத்துக்கும் அரசே பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
தல்வாரா கிராமத்தில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1ஆம் தேதி நேரிட்ட பயங்கர வெள்ளத்தின்போது, தனது பெற்றோர் மற்றும் பாட்டியை இழந்த இந்தக் குழந்தை மீட்புப் படையினரால் மீட்கப்பட்டிருந்தது.
இந்தக் குழந்தையின் தந்தை ரமேஷ் பலியான நிலையில், அவரது தாய் ராதா, பாட்டியின் நிலை என்னவானது என்பது இதுவரை தெரியவில்லை. அவர்கள் இதுவரை திரும்பாத நிலையில் உடலும் கிடைக்கவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இமாச்சல மாநிலத்தின் முதல்வர் சுக்-ஆஷ்ரய் யோஜனா திட்டத்தின் கீழ், நீதிகா, மாநிலத்தின் குழந்தையாக அறிவிக்கப்பட்டார்.
இந்தக் குழந்தையை வளர்த்தெடுப்பது, கல்வி மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது மாநிலத்தின் கடமை என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.