சோனம், ராஜா ரகுவன்ஷி  (Special arrangement/TNIE)
இந்தியா

தேனிலவு கொலை: திரைப்படமாக உருவாகும் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு!

தேனிலவு கொலை என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு.

இணையதளச் செய்திப் பிரிவு

திரைப்படக் கதைகளுக்கு சற்றும் குறைவில்லாத, ராஜா ரகுவன்ஷியின் கொலைச் சம்பவமே, தற்போது திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.

ஹில்லாங் தேனிலவு என்ற பெயரில், ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கு திரைப்படமாக உருவாகவிருக்கிறது. ராஜாவின் திருமணம், மரணம், வழக்கு விசாரணை, சோனம் கைது செய்யப்படுவது உள்ளிட்டவற்றைக் கொண்டதாக இப்படம் தயாரிக்கப்படவிருக்கிறதாம்.

இது குறித்து ராஜாவின் சகோதரர் சச்சின் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த தகவலில், சகோதரரின் மரணம் குறித்து திரைப்படம் தயாரிக்க நாங்கள் அனுமதி கொடுத்துவிட்டோம். எங்கள் சகோதரரின் மரணம் குறித்து படம் எடுக்க ஒப்புக்கொள்ளாவிட்டால், யார் சரி, யார் தவறு என மக்கள் அறிந்துகொள்ள முடியாமல் போய்விடும் என்கிறார்.

திரைப்படத்தை இயக்கும் எஸ்பி நிம்பாவத் கூறுகையில், எங்கள் திரைப்படத்தின் மூலம், இதுபோன்ற கொலைகள் ஒருபோதும் நடக்கக் கூடாது என்று வலியுறுத்தும் வகையில் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு இந்தூரிலும் 20 சதவீத படப்பிடிப்பு மேகாலயத்திலும் நடைபெறவிருக்கிறதாம்.

இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி, அவரது மனைவி சோனம் ரகுவன்ஷியால் மேகாலயத்தில் கொலை செய்யப்படுகிறார். இவர்களுக்கு மே 11ஆம் தேதி திருமணமான நிலையில், மே 23ஆம் தேதி ராஜா கொல்லப்படுகிறார்.

இந்த வழக்கில், சோனம் மற்றும் அவரது காதலர் ராஜ் குஷ்வாஹா மற்றும் கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர். தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT