தனிநபர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கு இன்னமும் 45 நாள்களே இருக்கும் நிலையில், கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான சில படிவங்கள் இன்னமும் ஆன்லைனில் வெளியிடப்படாத நிலையில், வெறும் 45 நாள்களே இருப்பதால் வரி செலுத்துவோரின் நலன் கருதி கால அவகாசம் வழங்கப்படும் என்றே நிதித்துறை சார்ந்த ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.
வருமான வரித் தாக்கல் செய்வதற்கான படிவம் 5, 6, 7 போன்றவை இன்னமும் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் வெளியாகவில்லை.
வழக்கமாக, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடையும். இந்த ஆண்டு, கடந்த மே மாத இறுதியில், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வற்கான கால அவகாசத்தை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்திருந்தது.
இந்த முறை, ஐடிஆர் படிவங்கள் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, எளிமையாக்கப்படும் என்றும், வெளிப்படைத்தன்மையுடன் அனைத்தும் நடக்கும் என்றும் அறிவித்திருந்தது. இந்த திருத்தங்களுக்கு ஏற்ப கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இன்னமும் 45 நாள்களே இருக்கும் நிலையில், உரிய படிவங்கள் ஆன்லைனில் வெளியாகததால், வரி செலுத்துவோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பம் முதலே தாமதம்
இந்த ஆண்டு, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான நடைமுறையை தொடங்கியதே தாமதமாகத்தான். மே இறுதியில்தான் ஐடிஆர் படிவங்கள் வெளியானது. அதில் சில வேறுபாடுகளும் இருந்தன. எக்ஸெல் அடிப்படையாகக் கொண்ட படிவம் பொறுமையாக வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை ஐடிஆர்-3 படிவம் வெளியாகவில்லை. அதுபோலத்தான் ஐடிஆர் 5, 6, 7 படிவங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.
இதையும் படிக்க.. ‘செத்த பொருளாதாரம்’.. கொன்றதே மோடிதான்! - ராகுல் காட்டம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.