இந்தியா

பள்ளிக் கட்டட பரப்பளவுக்கு ஏற்ப வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கை - சிபிஎஸ்இ விதிகளில் திருத்தம்

தினமணி செய்திச் சேவை

பள்ளிகளின் மொத்த நில அளவுக்கு பதிலாக கட்டட பரப்பளவின் அடிப்படையில் வகுப்புப் பிரிவுகளின் (செக்ஷன்) அதிகபட்ச எண்ணிக்கையை அனுமதிக்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ).

இதேபோல், உயா்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் சமமான எண்ணிக்கையில் செக்ஷன்களைப் பராமரிக்கவும் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துவரும் நிலையில், 40 மாணவா்களுக்கு ஒரு செக்ஷன் என்ற விதிமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், பள்ளியின் மொத்த நில அளவின் அடிப்படையில் அதிகபட்ச செக்ஷன்களின் எண்ணிக்கை இதுவரை அனுமதிக்கப்பட்டு வந்தது.

நிலம் பற்றாக்குறையாக இருக்கும் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிக்கும்போது, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டி புதிய செக்ஷன்களை ஏற்படுத்துவதில் சிக்கல் எழுகிறது; 40 மாணவா்களுக்கு ஒரு செக்ஷன் என்ற வரம்பையும் பள்ளிகளால் கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது என்று சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்து சிபிஎஸ்இ-க்கு கருத்துகள் கிடைக்கப் பெற்றன.

இதை கருத்தில் கொண்டு, பள்ளியின் கட்டட பரப்பளவின் அடிப்படையில் அதிகபட்ச செக்ஷனின் எண்ணிக்கையை அனுமதிக்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக, சிபிஎஸ்இ செயலா் ஹிமான்ஷு குப்தா தெரிவித்தாா்.

‘பள்ளிகளின் கட்டட பரப்பளவு பகுதிக்கு உள்ளாட்சி அமைப்பு அல்லது உரிமை பெற்ற கட்டட பொறியாளரால் சான்றளிக்கப்பட வேண்டும். உயா்நிலை (9,10 வகுப்புகள்), மேல்நிலை (11,12) வகுப்புகளில் சம அளவில் செக்ஷன்களைப் பராமரிக்க அனுமதி வழங்கப்படும். இவ்விரு நிலைகளிலும் மொத்த செக்ஷன்களின் எண்ணிக்கை, அப்பள்ளியின் ஒட்டுமொத்த செக்ஷன்களில் நான்கில் ஒரு பங்குக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்’ என்றாா் அவா்.

கட்டட பரப்பளவு அடிப்படையில் அனுமதிக்கப்படும் செக்ஷன் எண்ணிக்கை அட்டவணையையும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT