வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது.  
இந்தியா

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 25 குறைக்கப்பட்டுள்ளது.

DIN

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.

கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் குறைந்துள்ளது.

இதன்மூலம் தலைநகர் தில்லியில் ரூ.1,723.50-க்கும், மும்பையில் ரூ.1,674-க்கும், சென்னையில் ரூ. 1,881-க்கும், கொல்கத்தாவில் ரூ. 1,826-க்கும் வர்த்தக சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது.

இருப்பினும், உள்ளூா் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி தொடர்கிறது. கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.94.72-ஆகவும், டீசல் விலை ரூ.87.62-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வீட்டு சமையல் எரிவாயு உருளை விலையில் மாற்றமில்லை

எனினும், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ சமையல் எரிவாயு உருளையின் விலையில் மாற்றமில்லை.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஐஏஎஸ் கனவு என்றொரு மாயவலை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT