கரோனா பாதிப்பு.. 
இந்தியா

4000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்புகள்! கர்நாடகம், கேரளத்தில் இருவர் பலி!

கர்நாடகம், கேரளத்தில் கரோனா நோய்த்தொற்றால் இருவர் பலியானதைப் பற்றி...

DIN

கர்நாடகத்தில் கரோனா நோய்த் தொற்றால் இருவர் பரிதாபமாக பலியாகினர்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,700-ஐத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 360 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச கரோனா தொற்று இதுவாகும்.

ஜூன் மாதத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கேரளத்தில் 1400 பேர், மகாராஷ்டிரத்தில் 485 மற்றும் தில்லியில் 436 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கர்நாடகம் மற்றும் கேரளத்தில் முறையே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது மொத்தமாக 3,758 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 

இதையும் படிக்க: முஸ்லிம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3.6 கோடி சொத்துக்காக சண்டையிட்ட பிள்ளைகள்! கடைசியாக தெரிய வந்த உண்மை!!

பயங்கரவாதம் ஒருபோதும் காவி நிறத்தில் இருந்ததில்லை, இனியும் இருக்காது: ஃபட்னவீஸ்

உளவுத்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி: முதல்வர் நெகிழ்ச்சி!

பிராட்மேனின் 90 ஆண்டுகால சாதனையை முறியடிப்பாரா ஷுப்மன் கில்?

SCROLL FOR NEXT