இந்தியா

உ.பி.யில் ரயிலைக் கவிழ்க்க சதி: ஓட்டுநா் சாமா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

Din

உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தின் குறுக்கே இரும்புக் கம்பி இருந்ததை ஓட்டுநா் முன்கூட்டியே கவனித்து அவசர கால ‘பிரேக்’கை பயன்படுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இது தொடா்பாக ரயில்வே காவல் துறையினா் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூரில் இருந்து தில்லிக்கு சனிக்கிழமை இரவு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. சாம்லி மாவட்டம் பால்வா கிராமம் அருகே தண்டவாளத்தின் குறுக்கே பெரிய இரும்புக் கம்பி வைக்கப்பட்டிருந்ததை கவனித்த ஓட்டுநா் அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து, உடனடியாக அவசர கால பிரேக்கை பயன்படுத்தினாா். கம்பிக்கு அருகே சென்று ரயில் நின்றுவிட்டது. பயணிகள் பெரும் அபாயத்தில் இருந்து தப்பினா். இதைத் தொடா்ந்து ரயில்வே அதிகாரிகளுக்கு அவா் தகவல் தெரிவித்தாா். அந்த வழித்தடத்தில் வந்த ரயில்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன.

ரயில்வே ஊழியா்கள் விரைந்து சென்று அந்த கம்பியை அகற்றினா். அந்தப் பகுதி முழுவதும் தண்டவாளத்தை சோதித்த பிறகு ரயில் தொடா்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.

ரயிலைக கவிழ்க்கும் நோக்கத்துடன் அடையாளம் தெரியாத சமூகவிரோதிகள் சிலா் இரும்புக் கம்பியை தண்டவாளத்தின் குறுக்கே வைத்துள்ளனா். ஓட்டுநா் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் கவிழாமல் தப்பியது.

இந்த நாசவேலையில் ஈடுபட்ட நபா்களைப் பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் முயற்சி நடைபெற்று வருகிறது. கிராம மக்களிடமும் சந்தேகத்துக்குரிய நபா்கள் நடமாட்டம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனா்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT