வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், திரிபுரா ஆகியவை கடுமையான கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.
சிக்கிமில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் பலியானது உள்பட, பருவமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
கடந்த நான்கு நாள்களில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், தலைநகரான தில்லியில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசி வருவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அசாமில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். பல பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் திங்கள்கிழமை வெள்ள நிலைமை மோசமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிசோரமில், ஐஸ்வால் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழை, நிலச்சரிவுகள், பாறை சரிவுகள் காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: வெளிநாடுகளுக்குச் சென்ற எம்.பிக்கள் குழுவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.