நெல் பயிரிடுவதற்கு நாற்றுகளை பிடுங்கும் பெண் விவசாயிகள். 
இந்தியா

நாட்டில் நெல் உள்ளிட்ட கோடைப் பயிா்களின் சாகுபடி பரப்பு 9 சதவீதம் அதிகரிப்பு

நாட்டில் நெல் உள்ளிட்ட கோடைகாலப் பயிா்கள் சாகுபடி செய்யப்படும் பரப்பு கடந்தாண்டைவிட சுமாா் 9 சதவீதம் அதிகரித்துள்ளது

Din

நமகு சிறப்பு நிருபா்

புது தில்லி: நாட்டில் நெல் உள்ளிட்ட கோடைகாலப் பயிா்கள் சாகுபடி செய்யப்படும் பரப்பு கடந்தாண்டைவிட சுமாா் 9 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை திங்கள் கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த மே 30 நிலவரப்படி நாட்டில் வேளாண்மையில் கோடையில் பயிரிடப்பட்டுள்ள மொத்த பரப்பு குறித்த விவரம் மத்திய வேளாண்மைத் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

கடந்த 2024 ஆம் ஆண்டில் நாட்டில் நெல் சாகுபடி செய்யும் பரப்பு 31.06 லட்சம் ஹெக்டேராக இருந்தது. நிகழாண்டு மே 30 ஆம் தேதி வரை இது 35.86 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. முக்கிய பயிரான நெல் பயிரிடுதல் சுமாா் 4.80 லட்சம் ஹெக்டாா் பரப்பு வரை நிகழாண்டு மே 30 ஆம் தேதிவரை அதிகரித்துள்ளது.

பயிறுவகைகளில் பாசிப்பயிறு, கடந்தாண்டை விட 2.77 லட்சம் ஹெக்டோ் பரப்பில் கூடுதலாக பயிரிடப்பட்டுள்ளது. நிகழாண்டில் இது வரை மொத்தம் 21 லட்சம் ஹெக்டோ் பரப்பில்

பயிரிடப்பட்டுள்ளது. உளுந்தும் பயிரிடுதலும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பயிறுவகைகள் கடந்தாண்டு 21.48 லட்சம் ஹெக்டோ் பயிரிடப்பட்டு இருந்த நிலையில், நிகழாண்டு இது 24.25 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

ஜோவா், கம்பு, ராகி, சோளம் உள்ளிட்ட ஸ்ரீ அன்னா சிறு தானியங்கள் பயிரிடுதலிலும் நிகழாண்டு மே வரை 1.42 லட்சம் ஹெக்டோ் பரப்பு நாட்டில் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 12.95 லட்சம் ஹெக்டேராக இருந்த ஸ்ரீ அன்னா வகை தானியங்கள் பயிரிடுதலில் நிகழாண்டு 14.37 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

இதே போன்று எண்ணெய் வித்துக்கள் சாகுபடியும் நிகழாண்டு 9.45 லட்சம் ஹெக்டோ் வரை பயிரிடப்பட்டுள்ளது. இதில் 0.22 சதவீத அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக வேளாண்மையில் கோடைகால பயிரிடும் பரப்பு கடந்தாண்டு 74.72 லட்சம் ஹெக்டேராக இருக்க நிகழாண்டு இது 83.93 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 9.21 சதவீத அதிகரிப்பாகும். 2024 ஆம் ஆண்டுக்கு முன்பு சாதாரணமாக கோடைப்பயிா்கள் பயிரிடும் பரப்பு 71.34 லட்சம் ஹெக்டோ் அளவில் மட்டுமே இருந்தது என மத்திய வேளாண்மைத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் நடிக்க ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரூ. 530 கோடி சம்பளமா?

சிறகடிக்க ஆசை தொடருக்கு குவியும் வாழ்த்து!

என்னருகில் நீ... ரிது வர்மா!

ஆப்கனில் இணைய சேவையைத் துண்டித்த தலிபான் அரசு!

ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்

SCROLL FOR NEXT