கோப்புப் படம் 
இந்தியா

மணிப்பூரில் வெள்ளம்: 56,000 பேர் பாதிப்பு; 10,477 வீடுகள் சேதம்!

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வெள்ளதால் 56,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

DIN

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சுமார் 56,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால், உள்ளூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கனமழையால் அங்குள்ள ஆறுகள் நிரம்பி கரைகள் உடைந்ததால், சுமார் 10,477 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால், அம்மாநிலத்தைச் சேர்ந்த 56,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கிழக்கு இம்பால் மாவட்டத்தில், நேற்று (ஜூன் 2) அங்குள்ள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், 2,913 பேர் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இத்துடன், மணிப்பூரில் அதிகம் பாதிக்கப்பட்ட கிழக்கு இம்பாலின், கொங்பா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் கரைகள் உடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சுமார் 57 நிவாரண முகாம்கள் அம்மாவட்டத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் மணிப்பூர் மாநிலத்தில் 93 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. தலைநகர் இம்பால் மற்றும் கிழக்கு இம்பாலின் பல்வேறு இடங்களில் ஆற்றின் கரைகள் உடைந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: கரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் பலி: தமிழகத்தில் ஒருவர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT