அயோத்தி ராம தர்பார் பிராணப் பிரதிஷ்டை -
இந்தியா

அயோத்தி: ராம தர்பார் உள்பட 8 சன்னதிகளில் பிராணப் பிரதிஷ்டை!

ராமர் கோயிலில் வேத சடங்குகள் முழங்க இன்று பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது.

DIN

உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் முதல் தளத்தில் அமைந்துள்ள ராம தர்பார் உள்பட 8 சன்னதிகளில் இன்று பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது.

பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டு வரும் இக்கோயில் வளாகத்தில் முதல்தள பணிகள் நிறைவடைந்தது. இதையொட்டி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் தனது 53வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலுக்குச் சென்று 'பிராணப் பிரதிஷ்டை' சடங்குகளில் அவர் கலந்துகொண்டார். இந்த விழாவில், ஜானகியுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ராமரின் சிலைகள், பரதன், லட்சுமண் மற்றும் சத்ருகன், பஜ்ரங்கபலி சிலையுடன் வேத சடங்குகளின்படி பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டன. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோயிலில் நடைபெற்ற வழிபாடு மற்றும் ஆரத்தி பூஜையில் பங்கேற்றார்.

அயோத்தி ராமர் கோயிலில் பிரதான கடவுளான ஸ்ரீ பாலராமரின் பிராணப் பிரதிஷ்டை கடந்தாண்டு ஜனவரியில் பிரதமர் மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தினமும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேச மறுத்த மகள், வருந்திய ஹர்பஜன் சிங்... ஸ்ரீசாந்த் விளக்கம்!

ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

எந்த பயமுறுத்தலும் எங்களை அச்சுறுத்த முடியாது! - ரெய்டு குறித்து கனிமொழி

உலகளாவிய போர்களால் பாலியல் வன்முறைகளும் 25% அதிகரிப்பு!

இல.கணேசன் உடலுக்கு பிரதமர் மோடி சார்பில் மு.க. ஸ்டாலின் அஞ்சலி

SCROLL FOR NEXT