கோப்புப் படம் 
இந்தியா

பக்ரீத் பண்டிகை: கேரளத்தில் ஜூன் 7 பொது விடுமுறை அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் வருகின்ற ஜூன் 7 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கேரளத்தில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜூன் 7 ஆம் தேதி பொது விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் வருகின்ற ஜூன் 7 ஆம் தேதியன்று பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்படவுள்ளது. இதனால், வரும் சனிக்கிழமை (ஜூன் 7) கேரளத்தில் பொது விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விடுமுறையானது, கேரளத்திலுள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாணவர் பிரிவான, முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு, பக்ரீத் பண்டிகைக்கு ஒரு நாள் மட்டுமே பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதற்கு கேரள அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

முன்னதாக, ஜூன் 6 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை எனக் கருதப்பட்ட நிலையில் அன்று அரசு விடுமுறை என கேரளத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்பண்டிகை அதற்கு மறுநாள் கொண்டாடப்படும் என உறுதி செய்யப்பட்டதால் வரும் ஜூன் 7 ஆம் தேதிக்கு அந்த விடுமுறை மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிஜேடி முன்னாள் எம்.பி.யை மணந்த திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை!

ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி

தில்லியில் இன்று செயற்கை மழைக்குத் திட்டம்! வானிலை மனம் வைத்தால்..

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களில் மழை தொடரும்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT