தனது இல்லத்தில் மரக்கன்றுகளை நடும் பிரதமர் மோடி 
இந்தியா

தில்லி இல்லத்தில் "சிந்தூர்" மரக்கன்றுகளை நட்டார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி தனது இல்லத்தில் சிந்தூர் மரக்கன்றுகளை நட்டது தொடர்பாக..

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தில்லியில் தனது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி "சிந்தூர்" மரக்கன்றுகளை நடும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.

பூமியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினமான இன்று தில்லியில் உள்ளது தனது இல்லத்தில் பிரதமர் மோடி சிந்தூர் மரக்கன்றை நட்டார்.

சமீபத்தில் குஜராத் வருகை தந்திருந்தபோது, 1917ஆம் ஆண்டு போரில் குறிப்பிடத்தக்கத் துணிச்சலை வெளிப்படுத்திய பெண்கள் குழு பிரதமர் மோடியைச் சந்தித்து "சிந்தூர்" மரக்கன்றுகளை வழங்கினர். இந்த மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிப்பேன் என அந்த பெண்கள் குழுவிடம் பிரதமர் மோடி கூறியிருந்தார். அவர்களுக்கு அளித்த வாக்குறுதியைப் பிரதமர் மோடி இன்று நிறைவேற்றியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமரின் எக்ஸ் பதிவில்,

உலக சுற்றுச்சூழல் தினத்தில் நமது கிரகத்தைப் பாதுகாப்பதற்கும், நாம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்கும் நமது முயற்சிகளை மேலும் ஆழப்படுத்துவோம். சுற்றுச்சூழலைப் பசுமையாக்கவும் சிறப்பாகவும் மாற்றப் பாடுபடும் அனைவரையும் நாம் பாராட்டுகிறேன்.

உலகளாவிய காலநிலையைப் பாதுகாக்க ஒவ்வொரு நாடும் பாடுபட வேண்டும். பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது இந்தாண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள். இந்தியா கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக இதில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

வளங்களைக் கவனத்துடன் பயன்படுத்துவதையும் நிலையான வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொள்வதையும் ஆதரிக்கும் மிஷன் லைஃப் உலகம் முழுவதும் ஒரு பொது இயக்கமாக மாறி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்தல் என்ற மந்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த மரக்கன்றுகள் நாட்டில் உள்ள பெண்களின் வீரம் மற்றும் உத்வேகத்தின் வலுவான அடையாளமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தில்லியில் 200 எலெக்ரிக் பேருந்து சேவைகளைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் துணைநிலை ஆளுநர் சக்சேனா, தில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்காணிப்பு கேமிரா

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்!

மீன்பிடி படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழப்பு

உரிய நேரத்தில் வாக்காளா் பட்டியல்களை சில கட்சிகள் ஆராயவில்லை: தோ்தல் ஆணையம்

ஜம்மு - காஷ்மீா் பெருவெள்ளம்: மீட்புப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT