முதல்வர் ரேகா குப்தா கோப்புப்படம்.
இந்தியா

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

DIN

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி இரவு, காஜியாபாத் ஆணையரகத்தின் கோட்வாலி காவல் நிலையத்திற்கு அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது அவர், தில்லி முதல்வரைக் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

காஜியாபாத் கட்டுப்பாட்டு அறை உடனடியாக தில்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தது. தில்லி போலீஸார் உடனடியாக சம்பவ இடத்தை அடைந்தது. அதன் பிறகு அழைப்பாளரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அழைப்பு வந்த எண்ணைக் கண்டறிய முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஆர்சிபி பேரணி விவகாரம்! அரசியல் செயலாளர் விடுவிப்பு

கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அழைப்பு விடுத்த நபர் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார். இந்த வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். காஜியாபாத் மற்றும் தில்லி போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி, மர்ம நபரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: விஜய்

நெல்லையில் அமித் ஷா தலைமையில் 22ஆம் தேதி பாஜக மண்டல மாநாடு!

நவீன் பட்நாயக் உடல்நிலை முன்னேற்றம்; இன்று வீடு திரும்புகிறார்

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புயல் சின்னம்!

SCROLL FOR NEXT