பிரதமர் மோடி - கனடா பிரதமர்  
இந்தியா

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது.

DIN

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான அரசியல், பொருளாதாரம், வா்த்தகம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களை விவாதித்து, மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வோா் ஆண்டும் நடைபெறும் இந்த அமைப்பின் உச்சி மாநாடுகளில் சிறப்பு அழைப்பாளா்களாக இந்தியா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகள் பங்கேற்பது வழக்கம்.

2022-இல் ஜொ்மனியில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும், 2023-இல் ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும் பிரதமா் மோடி பங்கேற்றாா். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 அமைப்பின் செயல்திட்டங்கள் வகுப்பு கூட்டத்திலும் பிரதமா் மோடி பங்கேற்றாா். நிகழாண்டில் ‘ஜி7’ நாடுகள் உச்சிமாநாடு கனடாவில் வரும் 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு கனடா தரப்பில் இருந்து அதிகாரபூா்வ அழைப்பு விடுக்கப்படாமல் இருத்தது.

காலிஸ்தான் பயங்கரவாத விவகாரத்தால் கனடா - இந்திய உறவு சிறப்பாக இல்லை. இதனால், பிரதமா் மோடி கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க மாட்டாா் எனத் தகவல் வெளியானது. ஜி 7 மாநாடுக்கு இந்தியாவுக்கு கனடா அழைப்பு விடுக்காதது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியைக் காட்டுகிறது என்று காங்கிரஸும் விமா்சித்திருந்தது. இந்த நிலையில் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது.

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் இருந்து அழைப்பு வந்தது. சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். அதோடு இந்த மாத இறுதியில் கனனாஸ்கிஸில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்டதற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன். இந்தியாவும் கனடாவும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களால் வழிநடத்தப்படும் புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் இணைந்து செயல்படும்.

உச்சிமாநாட்டில் எங்கள் சந்திப்பை எதிர்நோக்குங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா பிரதமரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்பாரா? அல்லது இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பாரா? என்பது வரும் நாள்களில் தெரிய வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே ஊழியா் வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு

அணு ஆயு​தம் என்​னும் அச்​சு​றுத்​தல்

இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக தொடா் மழை

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்

SCROLL FOR NEXT