பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவ நாளில் திரண்டிருந்த பார்வையாளர்கள்  AP
இந்தியா

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் குழப்பம்!

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்க தலைமைப் பதவிகளிலிருந்து அடுத்தடுத்து ராஜிநாமா!

DIN

பெங்களூரு: ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் புதன்கிழமை(ஜூன் 4) நடத்திய பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

நிகழ்ச்சிக்கான உரிய டிக்கெட் இல்லாமல் லட்சக்கணக்கான ரசிகா்கள் மைதானத்துக்கு வெளியே கூடியதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி தமிழகத்தின் திருப்பூரைச் சோ்ந்த இளம்பெண் உள்பட 11 போ் உயிரிழந்தனா். 33 போ் காயமடைந்தனா்.

நாடெங்கிலும் இந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று(ஜூன் 7) மாலை நடைபெற்றது. விரிவான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின், செய்தியாளர்களுடன் பேசிய கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரகுராம் பாட், கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் செயலர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளதாகவும், கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் மேலாண்மைக் குழு அவர்களது ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். கர்நாடக அரசால் அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

தார்மீகப் பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகுகிறோம் என செயலர் ஏ. சங்கர், பொருளாளர் இ.எஸ். செய்ராம் தங்களது ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரினா சபலென்கா மீண்டும் சாம்பியன்!

சென்னையில் திடீர் மழை! மணலி புதுநகரில் 92 மி.மீ. மழைப் பதிவு!

எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்! - முதல்வர் ஸ்டாலின்

சொல்லப் போனால்... இன்னும் கொஞ்சம் இறக்கி வையுங்கள்!

செல்வம் சேரும் சிம்மத்துக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT