மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் எதிர்பாராத காலதாமதத்தால், விமானத்தை இயக்க விமானி மறுப்பு தெரிவித்தார்.
மகாராஷ்டிர துணை முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, வெள்ளிக்கிழமையில் ஜல்கான் நகரில் ஒரு மத ஊர்வலத்தில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து பிற்பகலில் மும்பை நகருக்கு, தனது தனிப்பட்ட விமானத்தில் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், ஜல்கானுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாததால், அங்கிருந்து மும்பை செல்லவிருந்த திட்டமும் காலதாமதமானது.
எதிர்பாராத காலதாமத்தையடுத்து, விமான நிலையத்துக்கு சென்ற நிலையில், விமானத்தை இயக்க அவரது தனிப்பட்ட விமானி மறுப்பு தெரிவித்தார்.
தனது பணிநேரம் முடிந்து விட்டதாகவும், விமானத்தை இயக்க புதிய அனுமதி பெற வேண்டும் என்றுகூறி, விமானத்தை இயக்க மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், விமானிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் மறுத்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.
இதனையடுத்து, 45 நிமிட வற்புறுத்தலுக்குப்பின், விமான நிறுவனத்திடம் இருந்து புதிய அனுமதி பெற்றபின்னும் தான் விமானம் இயக்கப்பட்டது.
இதனிடையே, மும்பையில் சிறுநீரக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவிருந்த பெண் ஒருவரும், தனது விமானத்தை தவற விட்டிருந்தார். இதனையறிந்த ஏக்நாத் ஷிண்டே குழுவினர், அந்தப் பெண்ணையும் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.