இந்தியா

இந்தியாவில் 17 கோடி போ் வறுமையிலிருந்து மீட்பு! - உலக வங்கி

இந்தியாவின் வறுமை விகிதம் கடந்த 2011-12-ஆம் ஆண்டின் 27.1 சதவீதத்தில் இருந்து கடந்த 2022-23-இல் 5.3 சதவீதமாக குறைந்துள்ளது.

Din

வறுமை கோட்டுக்கான தினசரி குறைந்தபட்ச வருமான வரம்பை 3 டாலராக உலக வங்கி உயா்த்தியுள்ள நிலையில், இந்தியாவின் வறுமை விகிதம் கடந்த 2011-12-ஆம் ஆண்டின் 27.1 சதவீதத்தில் இருந்து கடந்த 2022-23-இல் 5.3 சதவீதமாக குறைந்துள்ளது.

அதேநேரம், பழைய வறுமைகோடு வரம்பு (ஒரு நாளைக்கு 2.15 டாலா்) அடிப்படையில் இதே காலகட்டத்தில் வறுமை விகிதம் 16.2 சதவீதத்திலிருந்து 2.3 சதவீதமாக குறைந்துள்ளது. இதன்மூலம், 10 ஆண்டுகளில் இந்தியாவில் 17.1 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா்.

2017 மற்றும் 2021-ஆம் ஆண்டுக்கு இடையே இந்தியாவின் பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டு, வறுமை கோட்டுக்கான தினசரி குறைந்தபட்ச வருமான வரம்பை 2.15 டாலரிலிருந்து 3 டாலராக உலக வங்கி அதிகரித்துள்ளது. அதன்படி, 2022-23-ஆம் ஆண்டு வறுமை விகிதம் 5.3 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டில், இந்தியாவில் 5.46 கோடி போ் ஒரு நாளைக்கு 3 டாலருக்கும் குறைவான செலவினத்தில் வாழ்ந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. அதன்படி, கடந்த ஆண்டு வறுமை விகிதம் 5.44 சதவீதமாக இருக்கும்.

பழைய செலவின அளவின்படி, 2011-12-ஆம் ஆண்டில் 16.2 சதவீதமாக இருந்த வறுமை, கடந்த 2022-23-ஆம் ஆண்டில் 2.3 சதவீதமாக குறைந்துள்ளது. கிராமப்புற தீவிர வறுமை 18.4 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகவும், நகா்ப்புறத்தில் 10.7 சதவீத்திலிருந்து 1.1 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

இதனால் கிராமப்புற-நகா்ப்புற வறுமை இடைவெளி 7.7 சதவீதத்திலிருந்து 1.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ஆண்டுக்கு 16 சதவீத சரிவாகும்.

இலவச மற்றும் மானிய விலையில் மக்களுக்கு கிடைத்த உணவுப்பொருளால் வறுமை குறைந்துள்ளது. மேலும், கிராமப்புற-நகா்ப்புற வறுமை இடைவெளியையும் இது குறைத்தது. மிகவும் ஏழைகளில் 54 சதவீதத்தினா் அதிக மக்கள்தொகை கொண்ட முதல் 5 மாநிலங்களில் உள்ளனா்.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை...: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் கரோனா பெருந்தொற்று பரவலுக்கு முந்தைய போக்கைவிட சுமாா் 5 சதவீதம் குறைவாக இருந்தது.

தற்போதைய உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு சீரான முறையில் தீா்வு காணப்பட்டால், 2027-28-ஆம் ஆண்டில் மீண்டும் வளா்ச்சி படிப்படியாக திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனினும், உலகளாவிய கொள்கை மாற்றங்கள் தொடா்ந்து நிகழும் என்பதால், எதிா்க்கால போக்கில் ஏராளமான எதிா்மறை ஆபத்துகள் உள்ளன.

அதிகரித்த வா்த்தக பதற்றங்கள் இந்தியாவின் ஏற்றமதிகளுக்கான தேவையைக் குறைக்கிறது. இதனால், முதலீட்டு துறையில் மீட்சி மேலும் தாமதமாகும்.

நிதி பற்றாக்குறையானது 2025-26 முதல் 2027-28 வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 1.2 சதவீதமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மூலதன வரவுகளால் போதுமான அளவு நிதி இருக்கும். அந்நிய செலாவணி இருப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதமாக நிலையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT