இந்தியா

மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் மட்டும் 51% அந்நிய நேரடி முதலீடு: மத்திய அரசு

2024-25-ஆம் நிதியாண்டில் மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் மட்டும் நாட்டின் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்துள்ளன.

Din

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் நாட்டின் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்துள்ளன.

மத்திய தொழில் மற்றும் உள்வா்த்தக மேம்பாட்டுத் துறை அண்மையில் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.

அந்தத் தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் மகாராஷ்டிரம் அதிகபட்சமாக 1,960 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்தது. நாட்டின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் இது 31 சதவீதமாகும்.

மகாராஷ்டிரத்துக்கு அடுத்து கடந்த நிதியாண்டில் கா்நாடகம் 662 கோடி டாலா் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்ாக தரவுகள் கூறுகின்றன. அடுத்தடுத்த இடங்களில் தில்லி (600 கோடி டாலா்), குஜராத் (571 கோடி டாலா்), தமிழ்நாடு (368 கோடி டாலா்), ஹரியாணா (314 கோடி டாலா்), தெலங்கானா (300 கோடி டாலா்) ஆகியவை உள்ளன.

மகாராஷ்டிரம் மற்றும் கா்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள், கணிசமான அளவில் உள்கட்டமைப்பு வளா்ச்சியை எட்டியுள்ளன. இதுவே இந்த மாநிலங்களுக்கு அதிகபட்ச வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கான முக்கியக் காரணம் என்று பொருளாதார நிபுணா் ஒருவா் கூறினாா்.

சமீபத்திய மத்திய அரசு தரவுகளின்படி, பங்கு முதலீடுகள், மறுமுதலீடு செய்யப்பட்ட வருவாய் மற்றும் பிற மூலதனம் உள்பட மொத்த அந்நிய நேரடி முதலீடு கடந்த நிதியாண்டில் 14 சதவீதம் அதிகரித்து 8,104 கோடி டாலராக (ரூ.6.93 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாகும். முந்தைய 2023-24 ஆம் ஆண்டில் இதே அந்நிய நேரடி முதலீடு 71.3 கோடி டாலராக இருந்தது.

மலர் சூட்டும்... சுவாதி கொண்டே

செங்குயிலே... சாந்தினி தமிழரசன்

மும்ப்ராவில் பையில் கண்டெடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் !

ஒவியம்... தீப்ஷிகா!

உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள்: 8 பேர் பலி

SCROLL FOR NEXT