பெங்களூரு சின்னசாமி விளையாட்டுத் திடல்  
இந்தியா

பெங்களூரு சின்னசாமி திடல் வேறு இடத்துக்கு மாற்றம்? - கர்நாடக முதல்வர் ஆலோசனை

11 பேர் உயிரிழந்த துயரம் நேர்ந்த பெங்களூரு சின்னசாமி விளையாட்டுத் திடல் வேறு இடத்துக்கு மாற்றம்?

DIN

பெங்களூரு: 11 பேர் உயிரிழந்த துயரம் நேர்ந்த பெங்களூரு சின்னசாமி விளையாட்டுத் திடல் வேறு இடத்துக்கு மாற்றப்படுமா? என்ற கேள்விக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பதிலளித்துள்ளார்.

கா்நாடக கிரிக்கெட் சங்கத்தின் சாா்பில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த புதன்கிழமை காலை ஏற்பாடு செய்யப்பட்ட ஆா்சிபி அணிக்குப் பாராட்டு விழாவில் சிலருக்கு மட்டுமே கிடைத்த அனுமதிச்சீட்டுகள், பலருக்கும் கிடைக்காமல் போனதால் வலுக்கட்டாயமாக நுழைவாயில்களில் நுழைய முற்பட்டனா் ரசிகர்கள். அவர்கள் குறுக்குவழிகளில் மைதானத்தில் நுழைந்தனா். இதனால் தற்காலிக தடுப்புகளை உடைத்துக் கொண்டும் முன்னேறிய ரசிகா்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் விளைவால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சித்தராமையா அளித்துள்ள பதிலில், “சின்னசாமி திடலை மாநகர் எல்லைக்கு அப்பால் மாற்றப்படுவது குறித்த சாத்தியக்கூறுகள் அரசால் ஆய்வு செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT