கரோனா பாதிப்பு 
இந்தியா

ஒரே நாளில் 358 பேருக்கு கரோனா: கேரளத்தில் அதிக பாதிப்பு!

மீண்டும் பரவும் கரோனா பற்றி..

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 358 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டையே உலுக்கிய கரோனா பரவல் தொற்று முண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. வடமாநிலங்களான தில்லி, மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் புதிய கரோனா வகை தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனிடையே நாளுக்குநாள் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 6,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாந பாதித்து யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரளத்தில் அதிக பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கேரள மாநிலத்தில் மட்டும் 144 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 1,957 ஆக உள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று பாதித்த 624 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

கரோனாவின் புதிய மாறுபாடான ஜெஎன்1 வைரஸ் நாட்டில் பரவலாகப் பரவி வருகின்றது. பெரும்பாலானோருக்கு குறைந்த வீரியத்துடனே தொற்று பரவுகின்றது. இந்த பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு சோதனை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், மருத்துவமனைகளிலும், மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்ளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

SCROLL FOR NEXT