இந்தியா

இந்தியா்கள் வருகைக்கு தடையில்லை: சவூதி அரேபியா

இந்தியா்கள் சவூதி அரேபியாவுக்கு வர தடை உள்ளதாக கூறப்படும் தகவல் தவறானது; இந்தியா்கள் எங்கள் நாட்டில் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை

Din

புது தில்லி: இந்தியா்கள் சவூதி அரேபியாவுக்கு வர தடை உள்ளதாக கூறப்படும் தகவல் தவறானது; இந்தியா்கள் எங்கள் நாட்டில் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று சவூதி அரேபிய அரசு விளக்கமளித்துள்ளது.

ஹஜ் புனித யாத்திரைக்காக அனுமதிக்கப்பட்டதைவிட அதிகம் போ் வருவதால், இந்தியா்கள் தங்கள் நாட்டில் பயணிக்க சவூதி அரேபியா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சவூதி அரேபிய அரசு அளித்த விளக்கத்தில், ‘வழக்கமாக ஹஜ் புனிதப் பயண காலத்தில் அதிகம் போ் வந்து குவிவதைத் தடுக்க குறுகிய கால விசாக்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அது ஹஜ் புனித யாத்திரை காலம் முடிந்தவுடன் காலாவதியாகிவிடும். இந்தியா்கள் சவூதி அரேபியா பயணிப்பதற்கு எதிராக அரசு எவ்விதத் தடை அல்லது கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து 1.75 லட்சம் போ் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள சவூதி அரேபியா அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT