மணிப்பூர் 
இந்தியா

மணிப்பூரில் பதற்றம்: மாலை 5 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை!

இம்பால் மேற்கு மாவட்டத்தில் மேற்கண்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

DIN

புது தில்லி: மணிப்பூரில் ஓரிரு இடங்களில் வன்முறை மீண்டும் தலைதூக்கியுள்ளதைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்பால் மேற்கு மாவட்டத்தில் மேற்கண்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அம்மாவட்டத்தில் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வெளியில் நடமாடலாம். ஆனால் 5 மணிக்கு மேல் காலை 5 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மேற்கண்ட அனைத்து ஊரடங்கு விதிகளும் கடுமையாகப் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை

அதிவேக சதமடித்த ஸ்மிருதி மந்தனா..! ஆஸி.க்கு எதிராக 3-ஆவது சதம்!

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

SCROLL FOR NEXT