காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்  
இந்தியா

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் துன்புறுத்தல்: பிரதமர் மௌனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி

அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு எதிரான மோசமான நடத்தையை கண்டிக்கும் காங்கிரஸ்..

DIN

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மோசமாக நடத்தப்படுவதற்குப் பிரதமர் மோடி மௌனம் காக்காமல் உடனடியாக தலையிட்டு அதிபர் டொனால்டு டிரம்பிடம் பேச வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நேவார்க் விமான நிலையத்தில் இந்திய மாணவர் ஒருவர் கைவிலங்கிடப்பட்டு, தரையில் மண்டியிட வைத்து கட்டாயமாக வெளியேற்ற முயன்றது தொடர்பான விடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

இந்தியா மற்றும் இந்தியர்களின் கௌரவத்தைப் பாதுகாக்க மோடி அரசு தொடர்ந்து தவறி வருகின்றது. வரலாற்றில் முதல்முறையாக ஒரு வெளிநாட்டுத் தலைவர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் போர் நிறுத்தத்தை உறுதி செய்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவில் வாழும் இந்தியக் குடிமக்கள், மாணவர்கள் மீண்டும் மீண்டும் தவறாக நடத்தப்படுகிறார்கள். ஆனால் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். இல்லையெனில் அவருக்குப் பேசத் தைரியமில்லை என்றுதான் கருத வேண்டும்.

அவர் இந்தியப் பிரதமர். இந்தியா மற்றும் இந்தியர்களின் மரியாதையைப் பாதுகாப்பது அவரது மிக முக்கியமான பொறுப்பு. பிரதமர் மோடி உடனடியாக அதிபர் டிரம்பிடம் பேசி, அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகள் குறித்துத் தலையிடுமாறு முறையிட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடையாக இல்லை: கரூரில் தொல். திருமாவளவன் பேட்டி

மைலாஞ்சி இசை, டீசர் வெளியீடு!

ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்: அட்லி

ராம் அப்துல்லா ஆண்டனி டிரெய்லர்!

தங்கம் விலை ரூ. 92,000! மாலையில் மேலும் ரூ. 600 உயர்ந்தது! வெள்ளி விலையும்...

SCROLL FOR NEXT