இந்தியா

விமான விபத்து: மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு! - குஜராத் முதல்வர்

குஜராத் விமான விபத்து பற்றி குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பதிவு...

DIN

குஜராத் விமான விபத்தில் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

குஜராத் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்தது) புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்ததாக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளது. மீட்புப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விமான பயணிகளில் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து பற்றி குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமான விபத்துக்குள்ளான சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். காயமடைந்த பயணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் உடனடி சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்.

காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல போதிய ஏற்பாடுகளைச் செய்யவும் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்னிடம் பேசினார். முழு ஒத்துழைப்பை அளிப்பதாக உறுதி கூறியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT