குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியுடன் பிரதமர் மோடி கோப்புப் படம்
இந்தியா

குஜராத் விமான விபத்து! நண்பரை இழந்து வாடும் பிரதமர் மோடி!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு பிரதமர் மோடி இரங்கல்

DIN

குஜராத் விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் பலியான நிலையில், பலியானோர்க்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும், விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான விஜய் ரூபானியின் வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார்.

விஜய் ரூபானிக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், விஜய் ரூபானியின் குடும்பத்தினரைச் சந்தித்தேன். தற்போது அவர் இல்லை என்ற இழப்பை கற்பனைக்கூட செய்ய முடியவில்லை. அவரை 10 ஆண்டுகளாக எனக்கு தெரியும். கடினமான காலங்களில்கூட, நாங்கள் இருவரும் தோள் சேர்ந்து ஒன்றாக வேலை செய்தோம்.

அவர் பணிவான மற்றும் கடின உழைப்பாளியும்கூட. கட்சிக் கொள்கையில் அவர் எப்போதும் உறுதியோடு இருந்தவர். மாநில முதல்வராக, ராஜ்கோட் மேயராக, மாநிலங்களவை எம்.பி.யாக, மாநிலத்தின் பாஜக தலைவராக, குஜராத் அமைச்சராக என அவருக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு பதவிகளிலும் சிறப்பாகப் பணியாற்றி, மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டினார்.

குஜராத் முதல்வராக அவர் பணியாற்றியபோது, நானும் அவரும் சேர்ந்து கடினமாக உழைத்தோம். மாநிலத்தின் வளர்ச்சிப் பாதைக்கு அவர் பெரிதும் உழைத்தார் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அனைத்து உடல்களையும் அடையாளம் காண இயலாது: தடயவியல் மருத்துவர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT