நடிகர் விக்ராந்த் மாஸே, துணை விமானி கிளைவ் குந்தர்  
இந்தியா

விபத்துக்குள்ளான விமானத்தின் துணை விமானி 12த் பெயில் நடிகரின் உறவினர்!

ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய துணை விமானி பற்றி...

DIN

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய துணை விமானி கிளைவ் குந்தர் தனது உறவினர் என்று நடிகர் விக்ராந்த் மாஸே தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. விமானத்தில் பயணித்த ஒருவரைத் தவிர, மற்ற 241 பேரும் பலியாகினர்.

இந்த விமானத்தில், இரண்டு விமானிகள், 10 விமான ஊழியர்கள், 230 பயணிகள் பயணித்திருந்தனர்.

விமானத்தை இயக்கிய கேப்டன் சுமித் சபர்வால் (வயது 55) சுமார் 8,000 மணிநேரத்துக்கு மேல் விமானத்தை இயக்கிய அனுபவம் உடையவர்.

அவருடன் இணைந்து விமானத்தை இயக்கிய துணை விமானி கிளைவ் குந்தர், சுமார் 1,000 மணிநேரத்துக்கு மேல் விமானத்தை இயக்கியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துணை விமானி கிளைவ் குந்தர், தனது மாமன் மகன் என்று 12த் பெயில் படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் விக்ராந்த் மாஸே பதிவிட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து விக்ராந்த் மாஸே வெளியிட்ட பதிவில்,

”அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களை நினைத்தால் என் இதயம் உடைகிறது.

இந்த விபத்தில் என் மாமா கிளிஃபோர்ட், அந்த துரதிர்ஷ்டவசமான விமானத்தை இயக்கிய துணை விமானியான தனது மகன் கிளைவ் குந்தரை இழந்ததை அறிந்து இன்னும் வேதனை அடைந்துள்ளேன். கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பலம் தரட்டும் மாமா” எனக் குறிப்ப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுபிஐ சாதனை! ஒரே நாளில் ரூ. 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள்!

ஆச்சர்யமூட்டும் தலைவன் தலைவி படத்தின் வசூல்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து ஆக.8 முதல் ஒடிசாவில் காங்கிரஸ் போராட்டம்!

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான்!

திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை, கோவை காவல் நிலையத்தில் தற்கொலை! திமுக அரசுக்கு இபிஎஸ் கேள்வி

SCROLL FOR NEXT