மத்தியப் பிரதேசம்: என்கவுன்டரில் 4 நக்சல்கள் சுட்டுக்கொலை
மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் நடந்த மோதலில் மூன்று பெண்கள் உள்பட நான்கு நக்சல்கள் கொல்லப்பட்டனர்
மத்தியப் பிரதேசத்தில், பாலகாட் மாவட்டத்தில் உள்ள பச்சாமா தாதர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த மோதலில் 3 பெண்கள் உள்பட நான்கு நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
பாலகாட் காவல் கண்காணிப்பாளர் ஆதித்ய மிஸ்ரா, இந்த மோதலை உறுதிப்படுத்தினார். இது ஹாக் படை மற்றும் உள்ளூர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கர்நாடகம்: பைக் டாக்ஸி சேவைகள் அனைத்தும் நிறுத்தம் - ஜூன் 16முதல் இயங்காது!
வனப்பகுதியில் நக்சல்கள் இருப்பது குறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, ஆனால் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து ஆயுதக் குவியலையும் போலீஸார் மீட்டனர்.