FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கரோனாவுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 948 பேருக்கு கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு.

Updated On : 15 ஜூன் 2025, 8:51 pm IST
கோப்புப் படம்
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 948 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஒரே நாளில் கரோனாவுக்கு 10 பேர் பலியாகியுள்ளனர்.

சமீபகாலமாக கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், ஒரே நாளில் நேர்ந்த அதிகபட்ச பலி இதுவாகும்.

நாட்டில் கடந்த நில நாள்களாக கரோனா திரிபு வகையான எல்.எஃப். 7, ஜே.என். 1 மற்றும் என்.பி. 1.8.1. ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் புதிய வகை தொற்றுகள் ஆபத்தானவை அல்ல என்றாலும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். கேரளத்தில் 5 பேர், தில்லியில் 3 பேர், மகாராஷ்டிரத்தில் 2 பேர் கரோனாவுக்கு இன்று (ஜூன் 15) உயிரிழந்தனர். கடந்த ஜனவரி முதல் இதுவரை கரோனாவுக்கு 97 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகபட்சமாக கேரளத்தில் 2,007 பேரும், குஜராத்தில் 1,441 பேரும், மேற்கு வங்கத்தில் 747 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கேரளத்தில் 367 பேரும், குஜராத்தில் 177 பேரும், தில்லியில் 161 பேரும், மகாராஷ்டிரத்தில் 86 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 27 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | புணேவில் ஆற்றுப்பாலம் இடிந்து விபத்து: 6 பேர் பலி, பலர் மாயம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments