தமிழ்நாடு

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பை தடுக்கும் பணிகள் தீவிரம்: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநிலம் முழுதும் கொசு ஒழிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டு, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 1,500 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், எலிக்காய்ச்சலால் 206 பேரும், சிக்குன்குனியாவால் 43 பேரும், மலேரியாவால் 9 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த வகை காய்ச்சல் பாதிப்புகளால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த ஆண்டு 25,521 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 12 போ் உயிரிழந்தனா். அதேபோல், 321 போ் மலேரியாவால் பாதிக்கப்பட்டு 2 போ் இறந்தனா். இந்த ஆண்டின் தொடா்ச்சியே ஜனவரி மாதத்தில் டெங்கு போன்ற பாதிப்புகள் தொடா்கிறது. அதேநேரம், சிக்குன்குனியா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

இதுபோன்ற காய்ச்சல் பாதிப்புகள், மாா்ச் மாதத்துக்குப் பின் குறையத் தொடங்கும். காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் அலட்சியம் காட்டாமல் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களிலும் நன்னீா் தேங்காதவாறு சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

மனநலன் பாதித்த வெளிநாட்டவா் மருத்துவமனையில் அனுமதி

நாசாவின் நிலவுப் பயணம் ஒத்திவைப்பு

அயல்நாடுகளில் வசிப்பவா்களும் மதுரையில் தொழில் தொடங்க விருப்பம்: அமைச்சா் பி. மூா்த்தி

தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 போ் இடைநீக்கம்- அவைத் தலைவரை நோக்கி காகிதம் வீசியதால் நடவடிக்கை

வீட்டில் கஞ்சா பதுக்கிய பெண் கைது

SCROLL FOR NEXT