லுஃப்தான்சா ஏர்லைன்ஸ்  கோப்புப்படம்
இந்தியா

ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஹைதராபாத் விமானம்! ஏன்?

ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஹைதராபாத் விமானம் பற்றி..

DIN

ஜெர்மனியில் இருந்து ஹைதராபாத் வந்துகொண்டிருந்த லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம், மீண்டும் ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையத்துக்கு நேற்று மாலை லுஃப்தான்சா ஏர்லைன்ஸின் எல்எச் 752 விமானம் புறப்பட்டுள்ளது.

இன்று காலை ஹைதராபாத் வந்து சேர வேண்டிய விமானம், மீண்டும் பிராங்பேர்ட் விமான நிலையத்துக்கே திருப்பிவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்கட்ட தகவலை வெளியிட்ட லுஃப்தான்சா ஏர்லைன்ஸ், ஹைதராபாத்தில் தரையிறங்க அனுமதி கிடைக்காததால் மீண்டும் ஜெர்மனிக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது ஹைதராபாத் விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில்,

“ஹைதராபாத் நோக்கி வந்துகொண்டிருந்த லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலைத் தொடர்ந்து, ஜெர்மனிக்கு திருப்பிவிடப்பட்டது.

விமானத்துக்கு மிரட்டல் வந்தபோது, இந்திய வான்வெளிக்கு வெளியேதான் விமானம் வந்துகொண்டிருந்தது. மீண்டும் ஜெர்மனிக்கோ அல்லது அருகிலிருக்கும் விமான நிலையத்தை தொடர்புகொண்டு அவசர தரையிறக்கத்தை மேற்கொள்ளவோ அறிவுறுத்தப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மீண்டும் ஜெர்மனிக்கு திருப்பிவிடப்பட்டதாகவும், இன்று மீண்டும் ஹைதராபாத்துக்கு பயணிகளை அழைத்து வரத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

SCROLL FOR NEXT