குஜராத்தின் அகமதாபாத் விமான விபத்தில் பலியான 144 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,
அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பிற்பகல் 12 மணி நிலவரப்படி 144 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் பொருந்தியுள்ளது.
இந்த டிஎன்ஏ சோதனையை எஃப்எஸ்எல் மற்றும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் குழுக்கள் செய்து வருகின்றன. முன்னதாக திங்கள்கிழமை ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 125 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் வெற்றிகரமாகப் பொருந்தியதாகவும், இறந்த 124 பேரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளப்பட்டதாகவும், அதில் 83 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
காந்திநகரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தை இறந்தவர்களின் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டதை அமைச்சர் பார்வையிட்டார்.
இதற்கிடையில், அகமதாபாத் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ராகேஷ் ஜோஷி கூறுகையில்,
ஏர் இந்தியா விபத்தில் இறந்த பிஜே மருத்துவக் கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 7 ஆகும். விபத்திலிருந்து தப்பிய ஒரே நபரான விஸ்வாஸின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், படிப்படியாக முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார்.
ஜூன் 12 அன்று லண்டனுக்குச் சென்ற போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவ விடுதி வளாகத்தில் மோதியதில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 241 பயணிகள் உயிரிழந்தனர். மேலும், மருத்துவ விடுதி மாணவர்கள் உள்பட மொத்தம் 270 பேரைப் பலிவாங்கியது இந்த விமான விபத்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.