காற்றழுத்த தாழ்வுப்பகுதி 
இந்தியா

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

இரண்டு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

தெற்கு குஜராத், மேற்கு வங்கம் அருகே இரண்டு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது, இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வட மேற்கே நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையமாக வலுவடையும்.

மற்றொன்று, தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையமாக வலுவடையும்.

காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

மேலும், கோவை உள்ளிட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

தலைநகரில் தொடரும் மழை; ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்!

மோசடி வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா் கைது

கத்தி குத்து சம்பவம்: 4 சிறாா்கள் கைது

SCROLL FOR NEXT