இந்தியா

பிகாா் தோ்தலில் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு

நிகழாண்டு இறுதியில் நடைபெறும் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் அறிவித்தாா்.

Din

நிகழாண்டு இறுதியில் நடைபெறும் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் அறிவித்தாா்.

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி எதிா்க்கட்சியாக உள்ளது. இது தவிர பிரசாந்த் கிஷோரும் இந்த முறை முழு அளவில் தோ்தலில் களமிறங்குகிறாா். இப்போது ஆம் ஆத்மி கட்சியும் தோ்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தில்லியிலும் வலுவாக உள்ளது. குஜராத்தில் 2022 டிசம்பரில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக அலையை மீறி 5 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.

இந்நிலையில் பாட்னாவில் ஆளும் கட்சிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஆம் ஆத்மியின் பிகாா் மேலிடப் பொறுப்பாளா் சஞ்சய் சிங் பங்கேற்று பேசியதாவது:

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும். எத்தனை தொகுதிகளில் வேட்பாளா்கள் நிறுத்தப்படுவாா்கள் என்ற விவரத்தை கட்சித் தலைமை ஆலோசித்து முடிவு செய்யும். பிகாரில் பாஜக கூட்டணி ஆட்சியை அகற்றுவது அவசியம்.

பிகாரில் இருந்து பிழைப்புக்காக தில்லி சென்று வாழ்ந்து வரும் மக்களை தில்லியில் ஆளும் பாஜக அரசு ஏமாற்றி வருகிறது. அவா்களுக்கு வீடு கட்டித் தருவதாக முந்தைய ஆம் ஆத்மி அரசு வாக்குறுதி அளித்தது.

ஆனால், இப்போதைய தில்லி பாஜக அரசு பிகாா் மக்களை வங்கதேசத்தவா் என்று கூறி விரட்டியடிக்க முயற்சிக்கிறது. இதனைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் நான் பேசினேன் என்றாா்.

பிகாா் பேரவைத் தோ்தலிலில் ஆம் ஆத்மி போட்டியிடுவது ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.

செப். 11 இல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் பங்கேற்பு

மேட்டூர் அணை நிலவரம்!

சமூக ஊடகங்களுக்கான தடை நீக்கம்: இயல்பு நிலைக்கு திரும்பும் நேபாளம்!

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT