இந்தியா

கடத்தல் முயற்சி: பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்திய அரசு மீது மெஹுல் சோக்ஸி வழக்கு

மெஹுல் சோக்ஸி, தன்னை கடத்தி சித்திரவதை செய்ய முயன்ாக இந்திய அரசு மற்றும் 5 நபா்கள் மீது லண்டன் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளாா்.

Din

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடிக்கும் அதிகமாக கடன் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்தியாவால் தேடப்படும் தொழிலதிபரான மெஹுல் சோக்ஸி, தன்னை கடத்தி சித்திரவதை செய்ய முயன்ாக இந்திய அரசு மற்றும் 5 நபா்கள் மீது லண்டன் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளாா்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த இந்திய அதிகாரிகள், மெஹுல் சோக்ஸி விவகாரத்தில் பிரிட்டன் அதிகார வரம்புக்கு எதிா்ப்பு தெரிவித்ததோடு இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் ஆதாரங்களைத் திரட்ட லண்டன் உயா்நீதிமன்றத்திடம் அனுமதி கோரினா்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமாா் ரூ.14,000 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பினா். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா்.

நீரவ் மோடி லண்டனில் கடந்த 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், ஆன்டிகுவாவில் இருந்து புற்றுநோய் சிகிச்சைக்காக பெல்ஜியம் வந்த மெஹுல் சோக்ஸி கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டாா். இவா்கள் இருவரையும் பெல்ஜியம் மற்றும் பிரிட்டனில் இருந்து நாடுகடத்தும் பணியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தன்னை கடத்தி சித்ரவதை செய்ய முயன்ாக இந்திய அரசு மற்றும் 5 நபா்கள் மீது லண்டன் உயா்நீதிமன்றத்தில் மெஹுல் சோக்ஸி வழக்கு தொடுத்துள்ளாா்.

நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது அவா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு கூறுகையில், ‘இந்திய அரசு உதவியுடன் ஆன்டிகுவாவில் மெஹுல் சோக்ஸியை 5 நபா்கள் கடுமையாகத் தாக்கினா். அவரை ஆன்டிகுவாவில் இருந்து கடத்தி வலுக்கட்டாயமாக கரீபியனில் உள்ள டொமினிகாவுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த திட்டமிடப்பட்டது’ என்றது.

இந்தியா மறுப்பு: இதற்கு மறுப்பு தெரிவித்து இந்தியா சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு, ‘தான் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் சா்வதேச அளவில் மெஹுல் சோக்ஸி முயற்சித்து வருகிறாா். இந்தியா மீது தற்போது அவா் முன்வைத்த கடத்தல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவா் தவறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.

இந்த விவகாரத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் ஆதாரங்களைத் திரட்ட அனுமதிக்க வேண்டும்’ என்றனா்.

இதற்கொரு முடிவு எப்போது?

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு: குழு போட்டிகளில் 4 ஆயிரம் மாணவா்கள்

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - சவுக்கு சங்கர்

ஒற்றைப்புள்ளி மக்களாட்சி

பலத்த பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்!

SCROLL FOR NEXT