இந்தியா

சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை: ரூ.160 கோடி சொத்துகள் முடக்கம்

அமலாக்கத்துறை சோதனையில் ரூ.160 கோடி சொத்துகள் முடக்கம்

DIN

மும்பை: சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ரூ.160 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த ஜூன் 13-ஆம் தேதி மும்பையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து மும்பை, சென்னை, திlலி மற்றும் குருகிராமில் மொத்தம் 7 இடங்களில் தேடுதல் மற்றும் சோதனை நடத்தப்பட்டது.

சட்டவிரோத வர்த்தகச் செயலி - ‘ஆக்டா எஃப்.எக்ஸ். செயலி’ மற்றும் அதன் இணையதளம் மூலம் சர்வதேச அளவில் ஏஜெண்டுகள் மூலம் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பது தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடவடிக்கைகளை அமலாக்கத்துறை நடத்தியது.

அதில், சட்விரோத ஆவணங்கள் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட நிறுவனம் முதலீட்டாளர்களின் பணத்தை போலி கணக்குகள் மூலம் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. இதனை மறைக்கவும் செய்துள்ளது.

இந்த நிலையில், ஸ்பெயினில் உள்ள சொத்துகள் உள்பட ரூ.160.8 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்நாள் வசூல்: தமிழில் சாதனை படைத்த கூலி..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி!

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!

ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி

SCROLL FOR NEXT