X | Rekha Gupta
இந்தியா

பாஜக ஆட்சியைப் புகழ்ந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர்!

பாஜக அரசின்கீழ் தில்லியில் நல்லாட்சி நடத்தப்படுவதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் பேச்சு

DIN

பாஜக அரசின்கீழ் தில்லியில் நல்லாட்சி நடத்தப்படுவதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

தில்லி தலைமை செயலகத்துக்கு வருகை தந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், தில்லி முதல்வர் ரேகா குப்தா, தில்லி அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா, ஒடிசா துணை முதல்வர் கனக் வர்தன் சிங், தெலுங்கு தேசக் கட்சியின் பொதுச் செயலாளர் லோகேஷ் நாராவையும் சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து, மன்ஜிந்தர் சிங் கூறுகையில், தில்லியில் முதல்வர் ரேகா குப்தாவின் ஆட்சியைக் கண்டு, டோனி பிளேர் மிகுந்த வியப்படைந்தார்.

சுகாதார மேம்பாடு, சுற்றுச்சூழல் இயக்கங்கள், பயனுள்ள நலத்திட்டங்கள் வரையில் வெறும் 100 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட அரசுப் பணிகளால் டோனி பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் முதல்வர் ரேகா குப்தாவின் ஆற்றல்மிக்க தலைமையின்கீழான பாஜக ஆட்சியின் நிர்வாகத்தால், தில்லி தொடர்ந்து வேகமாக மாறி வருகிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கோளாறு! உண்மையைக் கூறிய ஊழியர்கள் பணிநீக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய அறிவிப்புகள்: தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி

பிரசித்திபெற்ற ஸ்ரீ செங்கழுநீரம்மன் ஆலய தேர்த் திருவிழா: தேரை வடம்பிடித்து இழுத்த ஆளுநர், முதல்வர்

2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர் மோடி

விஜய்யை முந்தினாரா ரஜினி? விமர்சனங்களால் தடுமாறும் கூலி!

இருசக்கர வாகனப் பேரணியை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்!

SCROLL FOR NEXT