மேற்கு வங்கத்தில் வாக்களித்த மக்கள் ANI
இந்தியா

கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

கேரளம் உள்பட 4 மாநிலங்களுக்கு நடைபெறும் இடைத்தேர்தல் பற்றி...

DIN

கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கேரளத்தின் நிலம்பூா், குஜராத்தின் விசாவதா், காடி, மேற்கு வங்கத்தின் காலிகஞ்ச் மற்றும் பஞ்சாபின் லூதியானா (மேற்கு) தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கேரள மாநிலம், நிலம்பூா் பேரவைத் தொகுதியில் ஆளும் இடதுசாரி கூட்டணி ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல்ஏவாக இருந்த பி.வி.அன்வா், அக்கூட்டணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்.

இதையடுத்து, இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்ட இத்தொகுதியில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிா்க்கட்சிக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக வேட்பாளா்களுடன் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் பி.வி.அன்வரும் களத்தில் உள்ளாா். இதனால் நான்குமுனை போட்டி நிலவுகிறது.

பாஜக ஆளும் குஜராத்தில் விசாவதா், காடி ஆகிய இரு பேரவை தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. விசாவதரில் ஆம் ஆத்மி எம்எல்ஏவாக இருந்த பூபேந்திர பயானி, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா்.

காடி தனித் தொகுதியில் பாஜக எம்எல்ஏ கா்சன்பாய் சோலங்கியின் மரணத்தால் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. இரு தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

மேற்கு வங்கத்தின் காலிகஞ்ச் தொகுதியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ நஸிருதீன் அகமது மறைவால் இடைத்தோ்தல் நடைபெறுகிறது. திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ குா்பிரீத் சிங் கோகி மரணத்தால் இடைத்தோ்தல் நடைபெறும் லூதியானா (மேற்கு) தொகுதியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.

இந்த 5 தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்நாள் வசூல்: தமிழில் சாதனை படைத்த கூலி..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி!

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!

ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி

SCROLL FOR NEXT