கோப்புப் படம் 
இந்தியா

கப்பலில் அத்துமீறி நுழைந்த 5 போ் கைது

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கப்பலில் அத்துமீறி நுழைந்த ஐந்து பேரை இந்திய கடலோர காவல்படையினா் கைது செய்தனா்.

Din

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கப்பலில் அத்துமீறி நுழைந்த ஐந்து பேரை இந்திய கடலோர காவல்படையினா் கைது செய்தனா்.

காக்கிநாடா அருகே வக்காலப்புடியில் மீன்பிடி படகில் வந்த ஐந்து நபா்களும் ‘பாத் ஃபைண்டா்’ என்ற கப்பலில் சட்டவிரோதமாக நுழைந்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்ட அந்தக் கப்பலின் மாலுமிகள் காக்கிநாடாவில் உள்ள கடலோர காவல்படை நிலையத்திடம் உதவி கோரினா். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதன் இடைமறிப்பு படகான ஐசிஜிஎஸ் - சி -438 உடனடியாக பாத் ஃபைண்டா் கப்பலை நோக்கிச் சென்றது.

இந்திய கடலோர காவல் படை கப்பலைக் கண்டதும் மா்ம நபா்கள் தங்கள் படகில் தப்பிச் செல்ல முயன்றனா். அவா்களை கைது செய்த கடலோர காவல் படையினா், காக்கிநாடா துறைமுக காவல் நிலையத்திடம் ஒப்படைத்தனா் என்று அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை! ஊடகங்களுக்கு வங்கதேச அரசு எச்சரிக்கை!

அமித் ஷாவுக்கு தேநீர் விருந்து அளித்த நயினார் நாகேந்திரன்

சென்னையில் கனமழை

ஹீரோ ஆசிய ஹாக்கி 2025: கோப்பையை அறிமுகப்படுத்தினார் துணை முதல்வர் உதயநிதி!

இந்தியாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு!

SCROLL FOR NEXT